தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களாக நியமனம் செய்யப்பட்ட 60 பேர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதத்திற்குள் ஊதியம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறையை அடுத்து கடந்த 2013-14-ஆம் கல்வியாண்டில் 60 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து இவர்களுக்கு ஊதிய கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், ஏப்ரல் முதல் வாரத்தில் அரசிடம் இருந்து இவர்களுக்கான ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக உயர் அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன், நிலுவையில் உள்ள ஊதியம் முழுவதும் அவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

English Summary : Payroll for 60 people who appointed as guest lecturers at colleges actions are taken seriously via Tamil Nadu government.