சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கார்குழலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்டான்லி மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவத்துறை மற்றும், கதிர் வீச்சுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் கார்குழலி, “கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பூசி மூலம் மிக எளிதில் தடுக்க முடியும் என்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறியும் “பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையும், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் மேமோகிராம் பரிசோதனையும் இந்த மருத்துவமனையிலேயே உள்ளது என்றும் கூறிய அவர் பெண்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் புற்று நோயாளிகளுக்கும், புற்று நோயில் இருந்து குணமாகியவர்களுக்கும் தேவையான உணவு முறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. புற்று நோயாளிகளின் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலான வீடியோ ஒன்றும் இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த நோயாளிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

English Summary : Chennai Stanley Hospital Cancer Awareness Event