பண்டிகைக் காலம் வருவதால், ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் உட்பட 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதன் காரணமாக, ரயில் நிலைய நடைமேடைகளில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அக்டோபர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.