இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்(டிஆர்டிஓ) இல் காலியாக உள்ள 1061 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். CEPTAM – 10 /A&A
1. Junior Translation Officer
சம்பளம்: ரூ. 35,400 – 1,12,400
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்டு ஏதாவது ஒரு பிரிவில் முதல்நிலைப் பட்டம் பெற்று ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு, ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கும் மொழிபெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. Stenographer Grade – 1 (English)
சம்பளம்: ரூ. 25,500 – 81,100
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று இருப்பதுடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றெடுக்க வேண்டும்.
3. Stenographer Grade – 2 (English)
சம்பளம்: ரூ. 25,500 – 81,100
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
4. Administrative Assistant (English/Hindi)
சம்பளம்: ரூ. 19,900 – 81,100
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்று இருக்க வேண்டும்.
5. Store Assistant ‘A’ (Hindi/English)
சம்பளம்: ரூ. 19,900 – 63,200
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்று இருக்க வேண்டும்.
5. Security Assistant ‘A’
சம்பளம்: ரூ. 19,900 – 63,200
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் நல்ல உடல் தகுதி பெற்றெடுக்க வேண்டும்.
5. Vehicle Operator ‘A’
சம்பளம்: ரூ. 19,900 – 63,200
வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6. Fireman/Fire Engine Driver
சம்பளம்: ரூ. 19,900 – 63,200
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம், நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிஆர்டிஓ – ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, தொழில் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
முதல் கட்ட தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100 கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.12.2022