தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரவை ஆலை முகவர்களுடன், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டும் அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று நடைபெற்றது.
மத்திய அரசு தெரிவித்துள்ளதை அடுத்து முதல்வர் ஆணைப்படி, பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசி வரும் 2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இரும்புச் சத்து, போலிக் அமிலம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசியுடன் கலந்து ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.