வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (02.01.2023) திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 4.45 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பரமபத வாசலை கடந்த ஸ்ரீநம்பெருமாளுடன் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி கோஷங்கள் முழங்க பக்தர்களும் பின் தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.