தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று (09.01.2023) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தீவுத்திடல் அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இலவச வேட்டி, சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.1000-மும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வினியோக பணிகள் தொடங்க உள்ளது. அத்துடன், பொங்கல் தொகுப்புக்கான பொருட்கள் தரமாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *