“கீழடி”

உலக வரலாற்றில் எத்தனையோ நாகரீகங்கள் தோன்றினாலும் அவற்றில் முதன்மையான தொன்மையான நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம், இது தான் நமக்கு கொடுக்கப்பட்ட செய்தி.ஆனால் அதுவல்ல உண்மை! நீங்கள் இதுவரை படித்த வரலாற்றையே மாற்ற வேண்டிய இடத்தில் நம்மை அழைத்து செல்கிறது 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை யில் உள்ள வைகை நாகரீகம்.

வைகை நாகரீகத்தின் வாயிலாக ஓர் பழமையான நகரத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது.அந்த நகரத்திற்கு தற்போது இருக்கும் பெயர் கீழடி.சங்க கால மதுரை இது தானா? அப்படி என்றால் தற்போது இயங்கி கொண்டிருக்கும் நகரம் மதுரை இல்லையா! இவ்வளவு பெரிய நகரம் உலகத்தின் அனைத்து மக்களோடு வணிகம் நடக்காமல் எப்படி உருவாக்கியிருக்க முடியும்.

இப்படி பல சுவாரஸ்ய பதிவுகளோடு தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி ‘பெருமைமிகு தமிழர் வரலாற்றை கூறும் “கீழடி”புதுயுகம் தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டு (14/4/2023) அன்று காலை 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஒன் மேன் ஷோ (One Man Show )

முதன்முறையாக 9 பின்னணி பாடகிகளுடன் SPB சரண் முழுக்க முழுக்க பங்கேற்று பாடும் நிகழ்ச்சி ஒன் மேன் ஷோ (One Man Show ) இதில் SPB பாடல்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி,கன்னடம்,தெலுங்கு என மூன்று மொழி பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். சமீபத்தில் சென்னை வாணிமஹாலின் சத்யாஸ் கீதாஞ்சலி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி புதுயுகம் மீடியா பார்ட்னராக பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் புத்தாண்டு அன்று மாலை 4:00 மணிக்கு நமது புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி மக்களுக்கு இசை விருந்தாதாக அமையும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *