சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏப்ரல் 12-ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் கல்வி ஆலோசனை முகாம் ஒன்று நடைபெற உள்ளது.

சுகாதாரம் சார்ந்த அறிவியல் படிப்புகளில் இளநிலை மற்றும் பட்டயப்படிப்புகள் படித்தால் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் மற்றும் இந்த படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய உதவித்தொகை ஆகியவை குறித்து இந்த கல்வி முகாமில் சுகாதாரத்துறையில் அனுபவம் உள்ள வல்லுநர்கள் ஆலோசனை கூற உள்ளனர்.

இந்த பயனுள்ள கல்வி முகாமில் கலந்து கொள்ள முன் பதிவு அவசியம் என்றும் இலவச முன்பதிவிற்கும், மேலும் பல விவரங்களுக்கும் சங்கர நேத்ராலயா, கே.என்.பிர்வோ ஆராய்ச்சி வளாக ஆடிட்டோரியம், 18, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம் (டி.பி.ஐ எதிரில்), சென்னை – 6. என்ற முகவரியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விவரங்களில் தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள 94440 33082 என்ற எண்ணை அணுகவும்.

English Summary : Health education counseling center in Chennai regarding jobs based on their department. Counselling takes place in Nungambakkam Chennai on April 12 .