கார்த்தி, லட்சுமி மேனன் நடித்த ‘கொம்பன்’ திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆனது. நீதிமன்றத்தின் உதவியால் பல தடைகளை தகர்த்து வெளியாகிய ‘கொம்பன்’ தமிழக முழுவதும் நல்ல வசூலை குவித்து வருவதாக விநியோகிஸ்தர்கள் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

ரூ.15 கோடி தயாரிப்பு செலவில் உருவான கொம்பன்’ திரைப்படம், முதல் வாரத்திலேயே ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாகவும், இன்று வெள்ளிக்கிழமை எந்த முக்கிய புதிய திரைப்படமும் ரிலீஸ் ஆகாததால் தொடர்ந்து இரண்டாவது வாரமாக நல்ல வசூலை தந்து கொண்டிருப்பதாகவும், பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்று முதல் சென்னையில் கொம்பன் படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தியின் மெட்ராஸ், கொம்பன் ஆகிய இரண்டு படங்களும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளதால் அவருடைய மார்க்கெட்டும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை ‘எம்.முத்தையா இயக்கியிருந்தார். ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவான இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

English Summary : Komban film collects Rs 25 crore in first week.