மறைந்த ஹாலிவுட் நடிகர் பால்வாக்கரின் கடைசி திரைப்படமான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 100 கோடி வசூலும், உலக அளவில் ஒரு பில்லியன் டாலர் வசூலை நெருங்கி வரும் நிலையில் சீனாவில் இந்த படம் வசூலில் புதிய சாதனை புரிந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சீனாவில் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7’ திரைப்படம் 2D, 3D. மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியானதாகவும் இந்த படம் மிட்நைட் காட்சிகளில் மட்டும் $8.05 மில்லியன் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு டிரான்ஸ்பார் திரைப்படம் $3.38 மில்லியன் வசூல் செய்ததே இதுவரை சீனாவின் அதிகபட்ச வசூலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரஷ்யாவில் இந்த படம் 1,182 காட்சிகளில் சுமார் $15 மில்லியன் வசூல் செய்துள்ளதாகவும், போலந்து நாட்டில் 195 காட்சிகளில் $1.97 மில்லியன் வசூல் செய்துள்ளதாகவும் இவை இரண்டுமே அந்தந்த நாடுகளில் செய்த வசூல் சாதனை என்றும் கூறப்படுகிறது.

English Summary: Fast and Furious 7 breaks the record in Box office of China.