சென்னையில் நேற்றைவிட வெயில் இன்று அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
சென்னையில் நேற்று விட இன்றும் வெயில் அதிகமாக இருக்கும். நேற்று மீனம்பாக்கத்தில் வெயில் அதிகமாக இருந்த நிலையில், இன்றும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 14 நகரங்களில் வியாழக்கிழமை (01.06.2023) வெப்ப அளவு சதத்தை கடந்தது. கத்திரி வெயில் முடிந்தும் பல்வேறு இடங்களில் நேற்று உச்சபட்ச வெப்பம் பதிவானது.
வெப்ப அளவு:
சென்னை மீனம்பாக்கம் – 105.8, திருத்தணி – 105.8, சென்னை நுங்கம்பாக்கம் – 104.18, வேலூர் – 104.18, புதுச்சேரி – 102.56, கடலூர் – 102.2, பரமத்தி வேலூர் – 102.2, நாகப்பட்டினம் – 102.02, திருச்சி – 101.66, மதுரை – 101.48, திருப்பத்தூர் – 100.76, பாளையங்கோட்டை – 100.58, ஈரோடு – 100.4, மதுரை விமான நிலையம் – 100.4, பரங்கிப்பேட்டை – 100.4, தஞ்சாவூர் – 100.4.