விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தலக்கோணம் என்ற இடத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்த நிலையில் தற்போது விஜய் அறிமுகமாகும் பாடல் காட்சிக்காக படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.
ரூ.5 கோடி செலவில் 200 பேர் அடங்கிய குழு ஒன்று பிரமாண்ட செட் ஒன்றை தலக்கோணத்தில் அமைத்து வருவதாகவும், கலை இயக்குனர் முத்துராஜின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு வரும் இந்த பிரமாண்டமான செட்டில் நூற்றூக்கணக்கான துணை நடிகர் நடிகைகளுடன் விஜய்யின் அறிமுகப்பாடல் படமாக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த பாடலுக்கு ஸ்ரீதர் நடனப்பயிற்சி அமைக்க உள்ளார். விஜய் படங்களில் வரும் வழக்கமான அறிமுகப்பாடல் போன்று இல்லாமல் பிரமாண்டமாக அமையவிருக்கும் இந்த பாடல் காட்சி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் சிம்புதேவன் தெரிவித்துள்ளார். விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே இந்த படம்தான் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் என்றும் கூறப்படுகிறது.
English Summary : Vijay’s next film’s “puli” introduction song budget is Rs.5 crores.