தொழிலாளர் வைப்பு நிதி குறித்த விவரங்களை ஒரே ஒரு எஸ்.எம்.எஸ். மூலம் எளிய முறையில் அறிந்து கொள்ளும் வசதி ஒன்று தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த வசதியை பெற முதலில் தொழிலாளர்கள் தங்களது UAN என்று கூறப்படும் பொதுக்கணக்கு எண்ணை www.uanmembers.epfoservices.in என்ற இணையதளத்தின் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதன்பின்னர் முந்தைய வருங்கால வைப்பு நிதி தொகையை நடப்பு கணக்குடன் இணைத்தல், வருங்கால வைப்பு நிதிக்கான மாத பங்களிப்புத் தொகை ஆகியவற்றை தாங்கள் பதிவு செய்துள்ள செல்போனில் இருந்து எஸ்.எம்.எஸ் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை அவரவர் தாய்மொழியிலும் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தொழிலாளர் வைப்பு நிதி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள EPFOHO UAN TAM என்றும், ஆங்கிலத்தில் தகவல்களைப் பெற விரும்புபவர்கள் EPFOHO UAN ENG என்றும் “டைப்’ செய்து 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் அவர்களுக்கு தேவையான விவரங்கள் எஸ்.எம்.எஸ் மூலமே அனுப்பி வைக்கப்படும் என, வருங்கால வைப்புநிதி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary: New facility for Labor Deposit Details. Details can be sent through M.M.S.