‘வீரம்’ படத்திற்கு பின்னர் அஜீத்துடன் மீண்டும் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ள இயக்குனர் சிறுத்தை சிவா, புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் உள்ள சாய்பாபா கோவிலில் படக்குழுவினர்கள் முன் நடைபெற்றது.

தற்போது இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ள நிலையில், அவருக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த ஆலோசனைகளை படக்குழுவினர் நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ‘அச்சமில்லை’ என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகின. இருப்பினும் இந்த படத்தின் டைட்டிலை அதிகாரபூர்வமாக மிக விரைவில் இயக்குனர் சிறுத்தை சிவா அறிவிப்பார் என கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்காக அனிருத் ஒரு தீம் மியூச்சிக்கை தயார் செய்துவிட்டதாகவும், அந்த தீம் மியூசிக் சிறுத்தை சிவா உள்பட படக்குழுவினர் அனைவரையும் கவர்ந்ததாகவும் கூறப்படுகிறது.