21_top_marks

தமிழகம் மற்றும் புதுவையில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியானது. இந்த தேர்வில் திருப்பூர் மாணவி பவித்ரா மற்றும் கோவையை சேர்ந்த மாணவி நிவேதா ஆகியோர் 1,192 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து உள்ளனர்.

1991 மதிப்பெண்கள் பெற்று விக்னேஸ்வரன், பிரவீன், சரண்ராம், வித்யா வர்ஷினி ஆகிய 4 மாணவர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் டிரினிட்டி அகாடமி மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் இவ்வருடம் ப்ளஸ் 2 மாணவர்கள் மொத்தம் 90.6% தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டும் இதே தேர்ச்சி விகிதமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவிகள் 93.4% தேர்ச்சி விகிதமும், மாணவர்கள் 87.5% தேர்ச்சி விகிதமும், பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் இயற்பியல் பாடத்தில் 124 பேர்களும், வேதியியல் பாடத்தில் 1,049 பேர்களும், உயிரியல் பாடத்தில் 387 பேர்களும், தாவரவியல் பாடத்தில் 75 பேர்களும், விலங்கியல் பாடத்தில் 4 பேர்களும், கணிதம் பாடத்தில் 9,710 பேர்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 577 பேர்களும், வணிகவியல் பாடத்தில் 819 பேர்களும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 5,167 பேர்களூம், வணிக் கணிதம் பாடத்தில் 1.036 பேர்களும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

 

English Summary: +2 Result Released Today. 9 thousand students got 200 out of 200 in Mathematics. Two Students scored first mark (1192).