Samantha actress photos
Samantha actress photos

வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவுள்ள முதல் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும் அவருக்கு ஜோடியாக ‘கத்தி’ நாயகி சமந்தா நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த தகவலை சமந்தாவின் தரப்பு தற்போது மறுத்துள்ளது.

சமந்தா தற்போது தமிழில் விக்ரமுடன் ’10 எண்றதுக்குள்ள’, சூர்யாவுடன் 24, தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார். அதுமட்டுமின்றி புலி படத்தை அடுத்து அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்திலும் நடிக்க அவர் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் வரை சமந்தா வேறு படங்களை ஒப்புக்கொள்ள முடியாத நிலையில் பிசியாக இருப்பதால் அவரால் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சமந்தா தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். எனவே சிவகார்த்திகேயன் தனது சொந்த படத்திற்காக வேறு நடிகையை தேடி வருவதாக கூறப்படுகிறது.

 

English summary: Actress Samantha refused to act with Actor Sivakarthikeyan.