vels
இன்று ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்து என்ன படிப்பு படிக்கலாம் என்ற ஆலோசனையில் இருப்பார்கள். இந்நிலையில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் 20 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நேவல் ஆர்க்கிடெக்சர், பெட்ரோலியம் எஞ்சினியரிங், ஓஷன் எஞ்சினியரிங், பயோ-மெடிக்கல் டெக்னாலஜி ஆகிய படிப்புகளும் அடங்கும்.

இதுகுறித்து பல்கலைக்கழகம் விடுத்த அறிவிப்பு ஒன்றில், “மாணவர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு வேல்ஸ் பல்கலைக் கழகம் புதுமையான படிப்புகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பி.டெக். நேவல் ஆர்க்கிடெக்சர், பெட்ரோலியம்எஞ்சினியரிங், பயோ-மெடிக்கல் டெக் னாலஜி, கோஸ்டல் மற்றும் ஓஷன்எஞ்சினியரிங் உள்பட புதிதாக 20 படிப்புகளை அறிமுகப்படுத்துகின்றோம்.

ஒவ்வொரு படிப்பிலும் தலா 60 பேர் சேர்க்கப்படுவர். இதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவு மே 18 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

மேற்கண்ட படிப்புகளில் சேரும் சிறந்த மாணவர்களுக்கு டியூஷன் கட்டணச் சலுகை வழங்க முடிவுசெய்துள்ளோம். அதன்படி, பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 95 சதவீதம் மற்றும் அதற்கு மேல் எடுத்தால் முதல் ஆண்டில் 50 சதவீத கட்டணச் சலுகையும், 90 சதவீதம் முதல் 94.99 சதவீதம் வரை பெற்றால் 40 சதவீதமும், 80 சதவீதம் முதல் 89.99 சதவீதம் வரை பெறுவோருக்கு 25 சதவீதமும் 70 சதவீதம் முதல் 79.99 சதவீதம் வரை எடுத்தால் 10 சதவீதமும் சலுகை அளிக்கப்படும்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

English Summary: 20 course introduced in vels university