167676-soundarya-473
சூப்பர ஸ்டார் ரஜினிகாந்த் – லதா தம்பதிகளின் இளைய மகளும்,கோச்சடையான் படத்தின் இயக்குனருமான செளந்தர்யாவுக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக ரஜினி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம்தேதி செளந்தர்யாவுக்கும் தொழிலதிபர் அஸ்வினுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் செளந்தர்யா கடந்த 2014ஆம் ஆண்டு கர்ப்பமானார். நேற்று இரவு 10 மணிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

செளந்தர்யா-அஸ்வின் தம்பதிகளுக்கு திரையுலகினர் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

English Summary: Boy Baby was born to Soundharya Rajinikanth.