collector_sundravalli
உபயோகமின்றி இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதா? என்பது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது: சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ள நெறிமுறைகளின்படி மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுந்து, சிறு குழந்தைகள் உயிரிழப்பதைத் தவிர்க்கும் வகையில், தேவையான தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சமீபத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இதில், ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும், பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பற்ற நிலையில் ஆழ்துளைக் கிணறுகள் இருப்பது குறித்த விபரங்கள் தெரிந்தால் உடனடியாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஜ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

English Summary: Bore Well safety in report artio, turns directive collector in chennai