airtel
ஏற்கனவே 2ஜி மற்றும் 3ஜி சேவையை வழங்கி வரும் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நேற்று சோதனை முறையில் 4ஜி சேவையை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சில குறிப்பிட்ட ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு, புதிதாக தொடங்கவுள்ள தங்களது 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட்வித் 4ஜி சேவையை சோதனை செய்து பார்க்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.

சென்னையை அடுத்து மும்பை மற்றும் ஐதராபாத்திலும் இம்மாத இறுதியில் இந்த சோதனை முயற்சி தொடர உள்ளதாக ஏர்டெல் அறிவித்துள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதிலும் உள்ள 19 நகரங்களில் ஏர்டெல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா, பெங்களூர், புனே, சண்டிகர், மொஹாலி ஆகிய நகரங்களில் இவைகளில் குறிப்பிடத்தக்க நகரங்கள் ஆகும்

 

English Summary: 4g network  launching in chennai