modi

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று சீனா சென்றடைந்தார். இன்று சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய பிரதமர் மோடியும், சீன பிரதமர் லீ கீகுவாங் அவர்களும் ரயில்வே, கல்வி, சுரங்கம் மற்றும் கனிமம், விண்வெளித்துறை, சுற்றுலா, நிலநடுக்க அறிவியல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, ” சென்னையில் சீன துணைத்தூதரகம் விரைவில் அமைக்கப்படும் என்றும் அதேபோல் சீனாவின் சிச்சுவான் மாகாணம் செங்குடுவில் இந்திய துணை தூதரகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்தியாவில் சீனத்தூதரகம் தற்போது புதுடில்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய மூன்று நகரங்களில் மட்டுமே உள்ளது. சென்னையில் சீனத்தூதரகம் அமைந்தால் தென்மாநில மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
English Summary: Chinese Embassy in China announced Modi in Chennai