மாற்றுத் திறனாளிகள், முதியோர் ஓய்வூதியம் உள்பட பல சமூகநலத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுபவர்கள் கூடுதல் தகவலாக தங்களது ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள், முதியோர்,  விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், முதிர்கன்னிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய உதவித்தொகை பெற்றுவரும் அனைத்துப் பயனாளிகளும் தங்களது ஆதார் எண் விவரங்களை கூடுதல் தகவலாக வட்டாட்சியர் அலுவலகங்கள், தங்கள் பகுதிக்கு வருகை தரும் வருவாய்த் துறை அலுவலர்கள், ஓய்வூதியம் கொண்டுவரும் தபால்காரரிடமும் அளிக்கலாம்.

ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தும் கிடைக்கப் பெறாதவர்கள் அதற்கான ஒப்புகைச் சீட்டு நகலையும் வழங்கலாம் என எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

English Summary: Peoples receiving the benefits of Government need to add the Aadhar Card No, says Chennai District Collector A.Sundaravalli.