சென்னையில் இயங்கி வரும் இசை-கவின் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் சினிமா இளநிலை பட்டம், சினிமா முதுநிலை பட்டம், சினிமா ஆராய்ச்சிப் படிப்பு (பி.ஹெச்.டி) போன்ற படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எனவே இந்த பல்கலைக்கழகத்துடன் சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியை இணைக்க வேண்டும் என மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் இயக்குநர், படத் தொகுப்பாளர் உள்பட திரைத் துறையை சார்ந்த 3 ஆண்டு பட்டயப் படிப்பு மட்டுமே உள்ளதாகவும், இந்த கல்லூரியை இசை-கவின் பல்கலைக்கழகத்துடன் இணைத்துவிட்டால் மாணவர்கள் சினிமா சம்பந்தப்பட்ட பட்டப்படிப்புகளை படித்து பயன்பெறுவர் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியை இசைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க வேண்டும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

மாணவர்கள் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் இதுகுறித்து நல்ல செய்தி வெளிவரும் என்றும் எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English Summary: Bachelor and PG Courses for Cinema in Music University.