இம்மாத 1ஆம் தேதி பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.3.96ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.37ம் உயர்த்தப்பட்ட நிலையில் பதினைந்து நாட்கள் இடைவெளியில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலைகளை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில், இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தியுள்ளன. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.3.13ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.71ம் உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த மாதத்தில் மட்டுமே பெட்ரோல் விலையை ரூ. 7.10 காசும், டீசல் விலையை ரூ. 5.10 காசும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. மேலும் கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலையை ரூ. 15.5 காசும், டீசல் விலையை ரூ. 11.15 காசும் உயர்த்தி இருப்பதால் நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விலையேற்றத்திற்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் உள்பட இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

English Summary: Petrol and Diesel Price increases twice in the gap of Two Weeks(15 Days).