கோடை விடுமுறையில் நெரிசலை கட்டுப்படுத்தவும், இரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டும் தென்னக ரயில்வே சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் ”பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை சென்டிரல்-கோவை இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ரயில் எண் 06032 கொண்ட இந்த ரயில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து வருகிற 22, 29 ஆகிய தேதிகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை வடக்கு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல், பிரீமியம் சிறப்பு ரயில் எண். 00604, கோவையில் இருந்து வருகிற 24, 31 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. ரயில் பயணிகள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளவும் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary: Chennai Central to Coimbatore Special Train Bookings Starts Today. Premium Trains Tickets bookings also started.