ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜுலியட்’ படத்தில் இடம்பெற்ற ‘டண்டனக்கா பாடல் தன்னை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சென்னை நீதிமன்றத்தில் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்த பிரபல இயக்குனர் டி.ராஜேந்தர் தற்போது படக்குழுவினர்களுடன் சமாதானமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
ரோமியோ ஜூலியட் திரைப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி ரிலீஸாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில் டி.ராஜேந்தரின் வழக்கால் ரிலீஸுக்கு பாதிப்பு வரும் என படக்குழுவினர் கவலை கொண்டிருந்தனர். இந்நிலையில் டி.ராஜேந்தரை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் அவருக்கு ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை சமீபத்தில் போட்டு காட்டியதாகவும், படத்தை பார்த்த டி.ராஜேந்தர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து படக்குழுவினர்களை பாராட்டியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
டி.ராஜேந்தர் தாக்கல் செய்த இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது அவர் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வார் என்றும், இதனால் ரிலீஸுக்கு இனிமேல் எவ்வித தடையும் இல்லை என்றும் ரோமியோ ஜூலியட் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஜெயம் ரவி, ஹன்சிகா, வம்சி கிருஷ்ணா, பூனம் பாஜ்வா, விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை லக்ஷ்மண் என்பவர் இயக்கியுள்ளார்.
English Summary: “Romeo Juliet” film problem comes to end. T.Rajendhar changes his mind after seeing the film and he will withdraw his case against this film. So, this film will release with no problem.