கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு பல பயனுள்ள பயிற்சி வகுப்புகளை பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் கோடைகால திரைப்பட மற்றும் நாடக பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

பல்வேறு வகையான படிப்புகளை வழங்கி வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தற்போது கோடைகாலத்தை மாணவர்கள் பயனுள்ளதாக்குவதற்காக கோடைகால சிறப்பு படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, தமிழகத்தில் முதல் முறையாக இந்த ஆண்டு கோடைக்கால திரைப்படம் மற்றும் நாடக நடிப்பு பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. இந்த வகுப்புகள் நேற்று முதல் வரும் 30ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

10ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் இந்த பயி|ற்சிக்கு தகுதியானவர்கள் ஆவார்கள். இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்களுக்கு 16 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கு ரூ.6,000 பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது பல்கலைக்கழக பதிவாளர் விஜயன், திரைப்படம் மற்றும் நாடக நடிகர் பூவிலங்கு மோகன், பேராசிரியர் முருகன் உள்பட பலர் கலந்து இருந்தனர்.

English Summary : Drama courses are added in Summer Coaching Classes by Open University TamilNadu.