இயற்கை வாழ்வியல் மற்றும் நலவாழ்வை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரவிந்த் ஆசிரமம் நடத்தும் 3 நாள் சுய சிகிச்சை முகாம் ஆகஸ்ட் 25, 26, 27 (வியாழன், வெள்ளி, சனி) ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

பெண்களுக்காகவே நடத்தப்படும் இந்த முகாம், காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பங்கேற்புக்கான எந்தவிதமான கட்டணமும் இல்லாது, அனைவருக்கும் திறந்தவையாக உள்ளது.

இந்த முகாமின் நோக்கம், உடல்நலம், மனநலம் மற்றும் உணவியல் மாற்றங்களை இயற்கை முறையில் கொண்டு வருவதே ஆகும். இதில் பங்கேற்பவர்கள் இயற்கை சிகிச்சைகள், உணவியல் வழிகாட்டி, யோகாசனம் மற்றும் வாழ்வியல் தத்துவங்களைப் பற்றி பயில்வார்கள்.

முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு அவசியம். வெளியூரில் இருந்து வருவோருக்காக தங்குமிட வசதியும் வழங்கப்படும்.

இடம் : அரவிந்த் ஆசிரமம்,
அரவிந்த் இயற்கை மருத்துவமனை,
140, முடங்கியார் ரோடு, இராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம்.

தொடர்பு எண் : 93618 08128

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *