சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரம் மாணவர்கள் மறுகூட்டலுக்க்கு விண்ணப்பம் செய்வதற்காக விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வரும் மே 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகே மறு மதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
ஆனால் வரும் கல்வியாண்டில் பி.இ மற்றும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வரும் மே 29-ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். எனவே பிளஸ் 2 மறுகூட்டல், மறு மதிப்பீட்டு மதிப்பெண் வரும் வரை மாணவர்கள் காத்திருந்தால், பி.ஈ, எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே அதுவரை மாணவர்கள் காத்திருக்க தேவையில்லை என்றும் திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் மட்டும் கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும் என்பதால் உடனே பி.ஈ., எம்.,பி.பி.எஸ் படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
English Summary : Authorities advised for Students willing to join B.E. and M.B.B.S. not to wait till revaluation results.