கடந்த 11ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், கடந்த 21ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளிவந்த நிலையில் இன்று சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வை தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த வாரமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகவும் தாமதமாக இன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பி.ஈ, எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்னும் நான்கு நாட்களே அவகாசம் உள்ள நிலையில் சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால், மாணவர்கள் இன்று தேர்வு முடிவு வெளியானவுடன் உடனே மேற்கண்ட படிப்புகளுக்கு தாமதமின்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேர்வு முடிவுகளை www.cbse.nic.in என்ற இணையதளம் மூலம் பகல் 12 மணிக்குப் பிறகு மாணவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற 27-ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தேர்வை தமிழகத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

English Summary : CBSE +2 results will be announced today at 12 noon.