கடந்த 2013ஆம் ஆண்டு ‘பாண்டியநாடு’ என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விஷால்-சுசீந்திரன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘பாயும் புலி’. இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மதுரை பகுதியை சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரியின் உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையிலும், அதன் சுற்றுப்புறத்திலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர்களுக்கு நேற்று விடுமுறை நாள் என்பதால், விஷால், சூரி, சுசீந்திரன் உள்பட படக்குழுவினர் அனைவரும் நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து விஷால் தன்னுடைய டுவிட்டரில், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்ததில் இருந்து பெரும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் உள்ளது என்று கூறியுள்ளார்.

விஷால், காஜல் அகர்வா, சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரித்திருத்து வரும் இந்த வேல்ராஜ் ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பும் செய்கின்றனர்.

English Summary : Paayum Puli film Actor Vishal and its crew spends a day in Madurai Meenakshi Amman temple for blessings.