சென்னையில் சமீபத்தில் நோக்கியோ ஆலை மூடப்பட்டதை அடுத்து ஃபாக்ஸ்கான் ஆலையும் மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் சென்னையில் இயங்கி வந்த ஃபாக்ஸ்கான் ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஃபாக்ஸ்கான் ஆலையை மூடுவது தொடர்பாக வரும் 15ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த ஃபாக்ஸ்கான் ஆலையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த ஆலையில் பணிபுரியும் 6 ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

6 ஊழியர்கள் தாக்கல் செய்த மனுவில், “தமிழக அரசிடம் அனுமதி பெறாமல் ஃபாக்ஸ்கான் ஆலையை மூட நிர்வாகம் முயற்சிப்பதாகவும், எந்த வித நடைமுறையும் பின்பற்றாமல் ஆலையை மூடுவதற்கு நிர்வாகம் முயற்சிப்பதாகவும், அதனை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary : Chennai Highcourt ban to shutdown Foxconn and orders to submit their report before 15th of this month.