salem-trainவரும் 19ம் தேதி முதல், சென்னை – சேலம் – சென்னை இடையே, புதிய வழித்தடத்தில், ‘சாப்ட்வேர் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில், அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, பெருங்களத்துார், தாம்பரம் வழியாகவும்; போரூர், பூந்தமல்லி, வேலுார் வழியாகவும், சேலத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், சென்னையில் பணிபுரியும், சேலத்தை சேர்ந்த மென்பொறியாளர்களின் வசதிக்காக, வரும் 19ம் தேதி முதல், பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, ஞாயிற்றுக்கிழமை தோறும், இரவு, 9:30, 10:00, 10:20, 11:35 மணிக்கு பஸ்கள் புறப்பட்டு, வண்டலுார், ஓ.எம்.ஆர்., கேளம்பாக்கம், சிறுசேரி, சோளிங்கநல்லுார், டைடல் பார்க், கிண்டி வழியாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடையும்.
கட்டணமும், எந்த இடத்தில் முன்பதிவு செய்வது என்பது குறித்தும், இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து, போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பிற பஸ்களை விட இந்த பஸ்கள், ஒரு மணி நேரம் முன்பாக சென்றடையும். இடையில் வேறு எங்கும் நிற்காது. பயணிகளின் விருப்பங்களை, 100 சதவீதம் பூர்த்தி செய்யும் வகையில், இவை இயக்கப்படும்’ என்றார்.

English Summary:Chennai-salem between ‘software express’