schooleduஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் பணிபுரியும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். இவ்வருடம் கொஞ்சம் தாமதமாக தற்போது நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரம் வெளியிட்ட நிலையில் ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுக்கான உத்தேச கால அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் நேற்று வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கலந்தாய்வு நாள் மற்றும் இடம் குறித்த விபரங்கள் பின்வருமாறு:

ஜூலை 29 (புதன்கிழமை) – அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல்.

ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) – அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.

ஆகஸ்ட் 3 (திங்கள்கிழமை) – அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி மாறுதல்.

ஆகஸ்ட் 5 (புதன்கிழமை) – அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு.

ஆகஸ்ட் 7 (வெள்ளிக்கிழமை) – அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முது கலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டத்துக்குள்).

ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை) – அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்).

ஆகஸ்ட் 10 (திங்கள்கிழமை) – அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வு.

ஆகஸ்ட் 11 (செவ்வாய்க்கிழமை) – உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்துக்குள் மாறுதல்).

ஆகஸ்ட் 12 (புதன்கிழமை) – உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டம் விட்டு மாவட்டம்).

ஆகஸ்ட் 17, 18 (திங்கள், செவ்வாய்) – பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல்.

இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

English Summary:Government itamarutal for teachers, promotion Conference Date