1lawசட்டக்கல்வி கலந்தாய்வில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் தகராறு

பி.ஏ., மற்றும் எல்.எல்.பி. சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த திங் தொழிற்கல்வி பிரிவில் காலியிடங்கள் இல்லாததால் அப்பிரிவு மாணவர்கள் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் தகராறு செய்தனர்.

ஐந்தாண்டு பி.ஏ.,எல்.எல்.பி. படிப்புக்கான கலந்தாய்வு கடந்த திங்கள்கிழமை முதல் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை அன்று பொதுப் பிரிவின் கீழ் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. சட்டப் படிப்பில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு 4 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இடங்கள் அனைத்தும் முதல் நாள் கலந்தாய்விலேயே நிரம்பி விட்டன.

இந்நிலையில், நேற்று கலந்தாய்வில் கலந்து கொள்ள வந்த எம்பிசி, பிசி முஸ்லிம் பிரிவு மாணவ-மாணவிகள் தொழிற்கல்வி பிரிவில் உள்ள இடங்கள் அனைத்தும் முதல் நாள் கலந்தாய்விலேயே நிரம்பியது தெரியாமல், குறிப்பிட்ட கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ள அப்பிரிவைச் சேர்ந்த எம்பிசி மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வின்போது, தொழிற்கல்வி பிரிவில் காலியிடங்கள் இல்லை என்ற தகவல் தெரியவந்தபோது அவர்கள் அங்கு பணியில் இருந்த சட்டப் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். ஓசி வகுப்பினருக்காக முதல் நாளன்று நடத்தப் பட்ட கலந்தாய்வில் மற்ற வகுப்பினருக்கான இடங்கள் எப்படி காலியாகும்? என்று மாணவர்களும் உடன் வந்த பெற்றோரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கலந்தாய்வு மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்றைய கலந்தாய்வு தொழிற்கல்வி பிரிவினருக்கு அல்லாமல் பொதுவான பிரிவில் உள்ள எம்பிசி, பிசி முஸ்லிம் வகுப்பினருக்கான கலந்தாய்வு என்ற விஷயத்தைச் சொல்லி மாணவர்களையும் பெற்றோரையும் சட்ட பல்கலைக்கழக அதிகாரிகள் அமைதிப்படுத்தினர்.

English Summary:vocational students dispute the law education counseling