ashwin-kakumanu-lakshmi-menonஅஜீத், ஸ்ருதிஹாசன் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் மற்றும் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு அங்கு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் இன்னுமொரு கேரக்டர் புதிதாக இணைந்துள்ளது.

அஜீத் தங்கையாக நடித்து வரும் லட்சுமி மேனனுக்கு ஜோடியாக நடிக்க நடிகர் அஸ்வின் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே அஜீத் நடித்த ‘மங்காத்தா’ படத்தில் போலீஸாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி மேனனுடன் கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவராகவும், லட்சுமி மேனனை காதலிப்பவராகவும் அஸ்வின் நடிக்கவுள்ளார். அஸ்வின் – லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படக்குழுவினர் கொல்கத்தாவில் இருந்து திரும்பி வந்தவுடன் படமாக்கப்படும் என தெரிகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், கபீர்சிங், அஸ்வின் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை வரும் தீபாவளி தினத்தில் திரையிட அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

English Summary:Ashwin is ajith sister’s couple