roadsசென்னை நகரில் போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் கார்களின் உபயோகத்தை குறைக்க பொதுமக்களை சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் கார்கள் இல்லாத நாள் ஒன்றை வாரந்தோறும் கடைப்பிடிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானதில் கூறப்பட்டுள்ளதாவது: சாலைகளில் மோட்டார் வாகனங்கள் அல்லாமல், சைக்கிள் ஓட்டுவது, மனிதனால் இயக்கப்படும் மோட்டார் அல்லாத சாதனங்களைப் பயன்படுத்த ஏதுவாக உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, சென்னை மாநகராட்சி மோட்டார் அல்லாத போக்குவரத்து கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, போக்குவரத்து வளர்ச்சிக் கொள்கைக்கான நிறுவனம் (ஐடிடிபி) சென்னை மாநகராட்சியுடன் இணைந்து “நமது சென்னை நமக்கே’ என்ற தலைப்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய சாலைகளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் கார்கள் அற்ற நாளாக கடைப்பிடிக்க ஆலோசனை தெரிவித்துள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட சாலைகள் பாதுகாப்பான உயிர்த்துடிப்புள்ள பொது இடங்களாக மாறும். மேலும், நெரிசலையும் காற்று மாசுபடுவதையும் தடுக்கும். இந்த முறை ஆமதாபாத், நவி மும்பை, லூதியானா, தில்லி, மும்பை ஆகிய இடங்களில் நடைமுறையில் உள்ளது. மேலும் கோவையில் “கோயம்புத்தூர் சந்தோஷமான தெருக்கள்’ என்ற தலைப்பில் இந்த முறை அமலுக்கு வரவுள்ளது. எனவே இந்த முறை சென்னையிலும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

English Summary:Carfree roads during sundays .Adopt a resolution in chennai.