கடந்த வருடம் தீபாவளி தினத்தில் வெளியான விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் ஒருசில மாற்றங்களோடு தெலுங்கில் ரீமேக் செய்யவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய், சமந்தா, சதீஷ் உள்பட பலர் நடித்த ‘கத்தி’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். ஜீவானந்தம், கதிரேசன் என இருவேடங்களில் விஜய் நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. விஜய் வேடத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், சமந்தா வேடத்தில் சமந்தாவே நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய், அசின் நடித்த காவலன் படத்தின் தெலுங்கு ரீமேக் படமான ‘பாடிகார்டு’ படத்தை இயக்கிய கோபிசந்த் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும், பிரபல தெலுங்கு படத்தயாரிப்பாளர் தில்ராஜூ இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விவசாயிகள் நிலம் மற்றும் தண்ணீரை அபகரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களை எதிர்த்து வயதான கிழவர்களின் துணையோடு ஒரு இளைஞன் போராடும் கதைதான் ‘கத்தி’. இருப்பினும் தெலுங்கு ரசிகர்களுக்காக இந்த படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து தர இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், விவசாயிகள் பிரச்சனைக்கு பதிலாக அங்கு வேறொரு பிரச்சனையை இந்த படத்தின் மூலம் வெளிப்படுத்த உள்ளதாகவும் படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. செப்டம்பர் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த படத்தில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆர் மிகுந்த ஆரவத்துடன் இருப்பதாகவும் அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Junior NTR and Samanthato act in “Kathi” Telugu remake.