பிரபல நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து விலகியிருந்த நிலையில் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் படமான ’36 வயதினிலே’ திரைப்படத்தில் சமீபத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருடைய கேரக்டர் சிறப்பாக கையாளப்பட்டிருந்ததால் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று நல்ல வசூலையும் கொடுத்தது. இதனால் உற்சாகமான ஜோதிகா, தொடர்ந்து நல்ல கேரக்டர் வந்தால் நடிக்கவுள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் முனி, காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய ஹாட்ரிக் வெற்றி படங்களை இயக்கிய ராகவா லாரன்ஸ் தற்போது ‘மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் ‘நாகா’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி நடிக்கவுள்ளார். இதில் ‘நாகா’ திரைப்படம் காஞ்சனா 2′ படத்தின் தொடர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அட்டகாசமான பேய் வேடம் ஒன்றில் நடிக்க பிரபல நடிகை ஒருவர் தேவை என்பதால், அந்த வேடத்தில் நடிக்க ராகா லாரன்ஸ், ஜோதிகாவை அணுகியதாகவும், இந்த படத்தில் உள்ள தனது கேரக்டரின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட ஜோதிகா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் பேயாகவும், குடும்பப்பெண்ணாகவும் மாறி மாறி நடித்த அனுபவம் உள்ளதால் அவருக்கு இந்த கேரக்டர் சரியாக பொருந்தும் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

English Summary : Jothika to act in “Naga” film directed by Raghava Lawrence.