மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று முதல் கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தேர்வுக்குழு (இளநிலை பட்டப்படிப்பு) தலைவர் டாக்டர் எம்.திருநாவுக்கரசு அவர்கள் கூறியபோது, “இளநிலை கால்நடை மருத்துவம் (பிவிஎஸ்சி), பிடெக் (உணவு தொழில்நுட்பம்), பிடெக் (பால்வள தொழில்நுட்பம்), பிடெக் (கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் அதாவது ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது. பிவிஎஸ்சி கலந்தாய்வு 6, 7-ந் தேதிகளிலும், பிடெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு 8-ந் தேதியிலும் நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு மூலமாக பிவிஎஸ்சி படிப்பில் 272 இடங்களும், பிடெக் படிப்புகளில் தலா 20 இடங்களும் நிரப்பப்பட உள்ளது.
English Summary : Veterinary counselling starts today August 6th till August 8th.