chennaimayorசென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைச்சாமி பல வருடங்களாக தனது மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் சார்பில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்த பயிற்சி, ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கு பெருமளவில் பயனுள்ளதாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 54 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 17 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணி கிடைத்துள்ளதாகவும் சந்தோஷமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி நடத்தும் மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு வகையான மத்திய, மாநில அரசு பணிகளுக்கு எந்தவித கட்டணமும் இன்றி பல வருடங்களாக தொடர்ந்து இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2014-15 சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் கலந்துகொள்ள பல மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நேர்முக தேர்விற்கு மனிதநேய மையத்தின் சார்பில் பங்கேற்ற மாணவ-மாணவிகளில் 62 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இந்த 62 பேர்களில் தற்போது 54 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள நபர்களுக்கு பணி ஒதுக்கீடு நிலுவையில் உள்ளதாகவும் அவர்களுக்கும் விரைவில் பணி ஒதுக்கீடு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.எஸ்.மெர்சி ரம்யா, எம்.என்.ஹரேந்திர பிரசாத், கே.பாலகுரு, கே.லட்சுமி பிரியா, எஸ்.புவனேஷ்வரி, எஸ்.அருண்ராஜ், எஸ்.ஹரிஷ், டி.பூபாலன், ஆர்.சஜ்ஜன், ஜே.ரீபா, ஆர்.ராஜகணபதி, பி.பிரியங்கா, ஏ.தமீம் அன்சாரியா, வி.விக்னேஷ்வரி, பி.விஜய் பாஸ்கர் ரெட்டி, ஏ.விக்ரந்த் ராஜா மற்றும் சி.வான்மதி ஆகிய 17 பேருக்கு ஐ.ஏ.எஸ். பணி கிடைத்துள்ளது.

ஒருவர் ஐ.எப்.எஸ்., 7 பேர் ஐ.பி.எஸ்., 2 பேர் ஐ.ஏ. மற்றும் ஏ.எஸ்., 12 பேர் ஐ.ஆர்.எஸ். (சி அண்டு சி.இ.), 5 பேர் ஐ.ஆர்.எஸ். (ஐ.டி.), 4 பேர் ஐ.ஆர்.ஏ.எஸ்., ஒருவர் ஐ.பி.ஓ.எஸ், ஒருவர் ஐ.ஆர்.டி.எஸ்., ஒருவர் ஐ.ஐ.எஸ்., ஒருவர் ஐ.சி.எல்.எஸ், 2 பேர் ஏ.எப்.எச்.கியூ ஆகிய பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை மனிதநேய ஐ.ஏ.எஸ். கல்வியகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Chennai mayor Saidai Duraisamy IAS and IPS training students was appointed.