உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒருகல் ஒருகண்ணாடி, நண்பேண்டா, மற்றும் இது கதிர்வேலன் காதல்’ ஆகிய மூன்று படங்களிலும் சந்தானம் அவர்கள் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருந்த நிலையில் திடீரென உதயநிதி ஸ்டாலின் தனது அடுத்த படமான ‘கெத்து’ படத்தில் சந்தானத்திற்கு பதில் கருணாகரனை ஒப்பந்தம் செய்தார். அந்த நேரத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வந்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் பிசியாக இருந்ததால் கருணாகரன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது உதயநிதி தனது அடுத்த படமான ‘ஜாலி எல்.எல்.பி ரீமேக் படத்திலும் சந்தானத்திற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த படத்தில் உதயநிதியுடன் முதல்முறையாக பிரபல காமெடி நடிகர் விவேக் இணைகிறார். இன்று நடைபெற்ற இந்த படத்தின் போட்டோஷூட்டில் விவேக் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விவேக் இந்த படத்தில் காமெடி மட்டுமின்றி குணச்சித்திர கேரக்டரிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கின்றார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தை அஹமது இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஜீவா, த்ரிஷா நடித்த ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாலி எல்.எல்.பி படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழுக்கு ஏற்றவாறு ஒருசில மாற்றங்கள் செய்து படத்தை இயக்கவுள்ளதாக இயக்குனர் அஹமது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது.
English Summary : Vivek joins first time with Udhayanidhi for “Jolly LLB” Tamil remake.