சினிமா என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பிலிம்கள்தான். ஆனால் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் தற்போது பிலிம்களுக்கு பதில் டிஜிட்டலில் ஒளிப்பதிவு செய்து திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். பெரும்பாலான திரையரங்குகள் டிஜிட்டலில் திரைப்படங்களை திரையிட்டு வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படம்தான் பிலிமில் வெளியான கடைசி திரைப்படம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தனி ஒருவன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது, ‘நான் சத்யராஜ் நடித்த ‘வள்ளல்’ படத்தில்தான் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனேன். அன்றுமுதல் ‘தனி ஒருவன்’ வரை அனைத்து படங்களையும் பிலிமில்தான் ஒளிப்பதிவு செய்துள்ளேன். பிலிமில் ஒளிப்பதிவு செய்யும்போது கிடைக்கும் அழுத்தம் கண்டிப்பாக டிஜிட்டலில் வராது. இதை புரிந்து கொண்டதால்தான் இன்றும் ஹாலிவுட்டில் பிலிமில்தான் படமெடுக்கின்றனர். ஆனால் இந்தியாவில்தான் பிலிமில் படமெடுக்கும் முறை முற்றிலும் அழிந்துவிட்டது.
‘தனி ஒருவன்’ படம்தான் பிலிமில் உருவாகிய கடைசி படம் என்று கூறுகின்றனர். இனிமேல் பிலிமில் திரைப்படங்கள் வராது என்றும், மூன்று ஆண்டுகளுக்கு பிலிமில் திரைப்படங்கள் வரும் என்றும் மாறுபட்ட கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது பார்க்கலாம் என்ன நடக்கின்றது என்று’ என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
English Summary : Thani Oruvan is the last film taken in film roll where other films are digitized.