அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த ‘வேதாளம்’ திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகி, அஜீத் ரசிகர்களின் பேராதரவை மட்டுமின்றி ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்சினிமா வரலாற்றில் அஜீத் படங்கள் ஒரே வருடத்தில் முதல் நாள் வசூலாக சுமார் ரூ.26 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸான ‘என்னை அறிந்தால்’ முதல் நாளில் சுமார் ரூ.11 கோடியும், தீபாவளி தினத்தில் வெளியான ‘வேதாளம்’ படத்தின் முதல் நாள் வசூல் சுமார் ரூ.15கோடியும் என மொத்தம் சுமார் ரூ.26 கோடி வசூல் செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மிகப்பெரிய நடிகரான கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ போட்டியில் இருந்தபோதும் ‘வேதாளம்’ படத்தின் வசூல் பிரமிக்க வைத்துள்ளதாக விநியோகிஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் வேதாளம் திரைப்படத்தின் முதல் நால் வசூல் சுமார் ரூ.15.5 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் கேரளாவில் ரூ.1.95 கோடியும், கர்நாடகாவில் ரூ.1.6 கோடியும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் ரூ.1.2 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஊடகங்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்துள்ளதால் இரண்டாவது நாளான நேற்று நல்ல வசூல் ஆகியதாகவும், விரைவில் ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இந்த படம் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘வேதாளம்’ படத்தை அஜீத் ரசிகர்களை போலவே கோலிவுட் பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து மகிழ்ந்துள்ளனர். சென்னை சத்யம் திரையரங்கில் தீபாவளி தினத்தில் இயக்குனர் ஷங்கர், ‘வேதாளம்’ படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் மற்றும் அஜீத்தின் மனைவி ஷாலினியும் ஆகியோர் ‘வேதாளம்’ படத்தை கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary-Vedhalam movie creates record breaking collections