சென்னை மக்களின் முக்கிய ஆன்மீக தலமாக விளங்கி வரும் வடபழநி அருள்மிகு ஆண்டவர் கோயிலில் கந்த சஷ்டி பெரு விழா தொடங்கியுள்ளது. இதையடுத்து ஏராளமான முருக பக்தர்கள் வடபழநி முருகன் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.
சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை நேற்று முன் தினம் காலை 8 மணிக்கு தொடங்கியது. கடந்த 12ஆம் தேதி தொடங்கிய கந்த சஷ்டி விழா, வரும் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை உச்சி கால பூஜையுடன் நிறைவடையவுள்ளது. இதுகுறித்து கோயில் துணை ஆணையர் அ.இளம்பரிதி கூறியதாவது: கந்த சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 17-ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு நடைபெறும். 18ஆம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 22-ஆம் தேதி வரை இரவு சுவாமி புறப்பாடு நடைபெறும். மேலும் கோயிலில் அன்னதானத் திட்டத்தின் மூலம் தினசரி 100 நபர்களுக்கும் மாதம்தோறும் கிருத்திகை தினத்தின்போது 500 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது என்ரு கூறினார். கந்த சஷ்டி விழாவின் தொடக்க நாளான வியாழக்கிழமை இந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
English summary-Kandasasti festival begins in Vadapalani Murugan Temple