water-14112015சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், பொதுமக்களுக்கான குறைதீர் கூட்டம் அந்தந்தப் பகுதி அலுவலகங்களில் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியின் குடிநீர் பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி செய்திக்குறிப்பு கூறுவதாது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், திறந்தவெளிக் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும். இந்த மாதத்துக்கான திறந்த வெளிக் கூட்டம் வரும் இன்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்துப் பகுதி அலுவலகங்களிலும் நடைபெறும்.

இந்தக் குறைதீர் கூட்டத்தில் குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீர், கழிவுநீர் வரி, கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை மனுக்களாகக் கொடுக்கலாம்.

கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் 28 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 22 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary-Chennai Metrowater will hold the monthly Metrowater open house meeting at the civic body’s 15 area offices on Saturday.