கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்த ‘புலி’ திரைப்படம் ஊடகங்களின் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதால் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் ஹன்சிகாவின் தாயாகவும், ‘வேதாள கோட்டையின் யவன ராணியாகவும் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி தன்னுடைய சம்பளப்பணத்தில் ரூ.50 லட்சம் படத்தின் தயாரிப்பாளர் பாக்கி வைத்திருப்பதாகவும் அதை பெற்று தரும்படி மும்பை தயாரிப்பாளர் சங்கத்தில் சமீபத்தில் புகார் அளித்தார். இந்த புகாருக்கு விளக்கமளிக்கும்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர்களை மும்பை தயாரிப்பாளர் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் புகாருக்கு சமீபத்தில் ‘புலி’ தயாரிப்பாளர்கள் ஒரு நீண்ட விளக்கத்தை அறிக்கை மூலம் அளித்தனர். அந்த அறிக்கையில் ஸ்ரீதேவிக்கு பேசிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், தெலுங்கு மற்றும் இந்தி பதிப்பிற்காக கூடுதலாக ஸ்ரீதேவி சம்பளம் கேட்பதாகவும், படம் எதிர்பார்த்த வசூலை தராததால், தங்களால் அவர் கேட்கும் தொகையை கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறினர். இந்நிலையில் தற்போது ‘புலி’ படத்தயாரிப்பாளர்களுக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே இந்த பிரச்சனை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டதாகவும், ஸ்ரீதேவியை சமீபத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்ட ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்கள் அவருடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் இறுதியில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தீர்க்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
English summary-compromise between Sridevi & Puli Producers