Lakshmi-Menon-141115கடந்த தீபாவளி தினத்தில் வெளியான அஜீத்தின் ‘வேதாளம்’ திரைப்படம் பெரும்பாலான திரையரங்குகளில் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. கனமழையையும் பொருட்படுத்தாது சென்னை உள்பட பல நகரங்களில் திருப்தியான வசுல் பெற்று வருவதாக திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகிஸ்தர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தில் அஜீத்துக்கு அடுத்தபடியாக தனது அபார நடிப்பின் மூலம் விமர்சகர்களின் பாராட்டை பெற்ற நடிகை லட்சுமி மேனனுக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய இயக்குனர் சீனுராமசாமி இயக்கவுள்ள அடுத்த படமான ‘தர்மதுரை’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தங்கை கேரக்டரில் நடித்தால் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது என்று கோலிவுட்டில் பலர் லட்சுமிமேனனை பயமுறித்திய நிலையில், அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அஜீத் படத்தில் தங்கை கேரக்டரில் லட்சுமி மேனன் நடித்தார். தற்போது இந்த செண்டிமெண்ட்டை லட்சுமிமேனன் உடைத்து மீண்டும் தொடர்ந்து ஹீரோயின் வேடத்தில் ஒப்பந்தமாகி வருகிறார் லட்சுமி மேனன்.
English summary-Lakshmi Menon in Vijay sethupathi movie