பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின்பாலி, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் உள்பட பலர் நடித்த ‘பிரேமம்’ திரைப்படம் சென்னையில் 150 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை தனுஷ் உள்பட பலர் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குனர் சாந்து மாண்ட்டி (Chandoo Mondeti) இயக்கவுள்ள இந்த படத்தில் நிவின்பாலி கேரக்டரில் நாகசைதன்யாவும், சாய்பல்லவி வேடத்தில் ஸ்ருதிஹாசனும் நடிக்கவுள்ளனர். சாய்பல்லவி நடித்த கல்லூரி பேராசிரியை வேடம் இந்த படத்தின் மிக முக்கிய கேரக்டர் என்பதால், ஸ்ருதிஹாசன் தற்போதே இந்த வேடத்திற்காக டிரைனிங் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் மலையாளத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்த கேரக்டரில் அவரே நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘மஞ்சு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு திரையுலகில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
english summary-Shruti Hassan in premam telegu remake